×

மேடை மெல்லிசை கலைஞர்கள் நல வாரியம் அமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடை மெல்லிசைக் கலைஞர்கள் இருக்கின்றனர். அவர்களுடன், குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கு கொள்கின்றனர். இசைத் தொழிலை நம்பியே வாழ்கின்றனர்.
கோயில் திருவிழாக்கள், திருமணம் மற்றும் மங்கல நிகழ்வுகள், அரசு விழாக்கள் அமைச்சர்கள் கலந்துகொள்கிற பொதுநிகழ்ச்சிகளில் மேடை மெல்லிசைக் கச்சேரிகள் நடந்து வந்தன. கொரோனா பொது முடக்கம், அவர்களுடைய வாழ்க்கையை அடியோடு முடக்கி விட்டது. இந்த தொழிலை தவிர வேறு எந்தத் தொழிலும் செய்யமுடியாத, செய்ய தெரியாத கலைஞர்கள், கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

இசைநிகழ்ச்சிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு விட்டதால், அவர்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது.  உணவகங்களிலும் சிறு கடைகளிலும் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்கின்றனர். கலைகளை வளர்த்த தமிழகத்தில், இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கின்ற வகையில், காவல்துறையின் உரிய அனுமதியுடன் இசை கச்சேரிகள் நடத்துவதற்கு உரிய அனுமதி தர வேண்டும். அவர்களுக்கு தனிநல வாரியம் அமைத்துத் தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Stage Melody Artists Welfare Board ,Tamil Nadu government , Stage Melody Artists Welfare Board to be set up: Vaiko requests Tamil Nadu government
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்